உனக்கு திரவியங்களின் இயக்கவியல் தெரியுமா ? அதில் ஒரு விஷயம் வருகிறது. ஒரு துளை உள்ளது. அங்கு நீரின் ஊற்று ஆரம்பிக்கிறது. அதே இடத்தில் வேறு ஒரு ஊற்றும் வந்து முடிவடைகிறது. அப்படியெனில் அங்கே ஒரு சுழற்சி ஏற்படுமாம். தினம் காலையில் கூட கண்ணாரக் காண்கிறேன். கடல் நதியாவற்றையும் இப்படியே கணக்கிடப் பார்க்கிறேன். எப்படி கணக்கிட்டாலும் அந்த குவிமையத்தை என்னால் கண்டடைய முடிவதில்லை. கற்பனையில் கூட. எழுத்தும் ஒரு நீர். வேறு ஒரு வடிவத்தில் இருக்கிறது. எந்த வடிவம் என்று தான் தெரியவில்லை. நான் அதன் சுழற்சியில் சிக்கிக் கொள்ள விரும்புகிறேன்.