இன்றைய மனிதர்களுக்குத் தேவை சதுரமான ஒரு கணினி,கையடக்க அலைபேசி.
ஆரம்ப கால திரைப்படங்களில் வரும் பெரும் சத்தத்துடன் ஓடும் ரயில்கள்,பறக்கும் கார்கள்,விசித்திர மனிதர்கள்,பாயும் குதிரைகள்,சீறும் பாம்புகள்,ஆடும் அழகிகள்,மெர்மெய்ட் எனப்படும் கடல் கன்னிகள்,சிரிப்பூட்டும் நகைச்சுவையாளர்கள் என்று நம்மை மகிழ்ச்சியின் விளிம்பு வரை இழுத்துச் செல்லும் மாய உலகம்.இருள் நிறைந்த திரையரங்குகளில் நாம் பார்க்கின்ற ஒளிக்கற்றையின் மூலம் திரையில் உருவங்கள் விழுகின்றன.ஆடிப்பாடுவதும் பேசுவதும் எப்படி?அவைகளின் வண்ணங்கள் வருவது எங்கிருந்து?அந்த மாயத்திரை தான் நம்மை கனவுலகிற்கு இட்டுச் செல்கிறது.நாம் இருக்கும் இடத்தை மறக்கச் செய்து கற்பனை உலகிற்கு பயணம் செய்ய வைக்கும்.இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தி காட்டுவது விஞ்ஞானமே.அதன் மூலமே வெண் திரையில் படங்கள் ஆடுகின்றன..அசைகின்றன.இந்த ஆட்டமும்,ஓட்டமும் உண்மையாக நிகழ்வனவல்ல.வெறும் தோற்ற மயக்கங்கள்.