திரைப்படங்களோடு தமிழர்களுக்கு இருக்கிற பிணைப்பு மிக உணர்வுபூர்வமானது.தமிழ் வாழ்வின் மறுக்க முடியாத அங்கமென திரைப்படங்கள் மாறிவிட்டிருப்பதன் சாட்சியே ,அதன் கலைஞர்களை நாம் நமது அரசியல் தலைவர்களாகவும் ஏற்றுக்கொண்டிருப்பது.அத்தகைய பலம்வாய்ந்த காட்சி ஊடகமான திரைப்படத்தை,ஒரு எளிமையான அறிமுகத்தின் மூலம் பாமரர்களுக்கு கொண்டுசேர்க்கிற சிறு முயற்சியே இந்நூல்.