வேறுபட்ட ஆசிரியர்களால் படைக்கப்பட்ட இந்தத் தொகுதியில் உள்ள இருபத்தோரு கதைகளும் தற்கால இந்தியக் குறுங்கதைகளின் குறுக்கு வெட்டு
உருமாதிரியாகும். இருபது கதைகள் இந்தியாவின் இருபது மொழிகளினின்றும் மொழி மாற்றம் செய்யப்பட்டவை ஆற்றலுக்குப் பதச்சோறு ஆகும்.
பல்வேறு இந்திய மொழிகளுக்குமான சாகித்திய அகாதெமியின் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ள இக் கதைகள் எளிமைக்கும்
ஆரவாரத்துக்கும் பழமைக்கும் புதுமைக்கும் இடையேயான வளம் செறிந்த முரண் நகைகளோடு பரந்து விரிந்த இந்திய வாழ்வினூடே ஈர்த்துப் பிடிக்கும்
கண நேர ஒளிச் சிதற்ல்களை விவரிக்கின்றன.தேவைப்படுமென்றால் இதோ! இங்கே ஒரு சான்று இருக்கிறது. அதாவது வேறு வேறு மொழிகளில்
படைக்கப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றுதான். இந்த ஒருமைப்பாடு உருச்சிதைந்த ஒருருப்படுவதால் நேர்ந்தது என்பதே அது.