நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள்
நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷன் ஏர் கண்டிஷன், வாஷிங்மெஷின், மிக்ஸி, கிரைண்டர், கியாஸ் அடுப்பு போன்றவை இன்றைய அவசர உலகில் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. பால்பண்ணை, உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், மீன் மற்றும் இறைச்சிக் கிடங்குகள், ரப்பர் தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு அரங்குகள், சுரங்கங்கள், கார் ரயில், ஏர்கண்டிஷன் ஆகியவை மிகவும் தேவைப்படுகின்றன. அதனால் இந்தத் துறையில் தொழில் நிபுணர்கள் ஏராளமானவர்கள் தேவைப்படுகிறார்கள்.
ரெப்ரிஜி,ரேஷன் & ஏர் கண்டிஷனிங் மெக்கானிஸம் 'என்ற இந்த நூலின் ஆசிரியர் திரு.சி.எம். ஜாய் ஜார்ஜ் அவர்கள் மிகவும் சிறப்பாக இந்த நூலை உருவாக்கியுள்ளார். ரெப்ரிஜிரேஷன் ஏர் எண்டிஷன் கருவிகளின் உதரிப்பாகங்கள் , இணைப்புகள், பொருத்துதல், செயல்பாடுகள், பழுது பார்த்தல், பாதுகாத்தல், போன்ற செய்திகள் மிகவும் எளிமையாகத் தெளிவாக எல்லோரும் படித்தறியும் வண்ணம் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
- See more at: http://www.noolulagam.com/p
-பதிப்பகத்தார்