முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆகிய துறைகளிலும் பங்காற்றியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், செக் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக்கப்பட்டுள்ளன.
லக்கிய சிந்தனை, மத்திய அரசின் 'பாஷா பாரதி', ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்', அமெரிக்கவாழ் தமிழர்களின் 'விளக்கு' ஆகிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து கலிஃபோர்னியா, சிக்காகோ மற்றும் யேல் பல்கலைக்கழகங்களிலும் ஃப்ரான்சில் உள்ள INALCO ஆய்வு நிறுவனத்திலும் உரையாற்றிருக்கிறார். வோடோஃபோன் - க்ராஸ்வோர்ட் மொழிபெயர்ப்பு விருதுககான நடுவர் குழுவிலும் பலமுறை பங்கேற்றிருக்கிறார்.