அண்மைக்கால நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை ஆகிய பல்துறை நூல்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. இதில் வெளிப்படும் பல்வேறு கருத்தோட்டங்கள் இக்கால கட்ட மதிப்பீடுகள் குறித்த பார்வைகளையும் பரி சீலனைகளையும் செறிவாக முன்வைக்கின்றன.
வெளி ரங்கராஜன் கடந்த பல ஆண்டுகளாக கலை இலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். நாடகத்தை முன்நிறுத்தி தொன்மம், புனைவு மற்றும் அழகியல் சார்ந்து இவர் கவனப்படுத்தும் பல்வேறு அக்கறைகள் ஒரு ஆழ்ந்த குரலில் ஒலிப்பவை.