நவீனமான எல்லாவற்றையுமே தேடிப் பிடித்து உபயோகிக்கும் நம் தமிழினம்... ‘மருத்துவம்,மருந்துகள்’ என்றால் மட்டும் பாட்டி வைத்தியம்,பக்கத்து வீட்டு வைத்தியம்,மூலிகை வைத்தியம் எனப் பல சிகிச்சை முறைகளை நாடுகிறது.பிறகு நோய் மோசமானதும்,நவீன மருத்துவத்தை தேடி ஓடுகிறார்கள்.இன்னும் சிலர் நோயின் ஆரம்பக்கட்டத்தில் வந்து தீர்வு தேடாமல்,நோயை முற்றவிட்டுக்கொண்டு வந்து செர்கிறார்கள்.காரணம், ‘ஆங்கில ஆங்கில மருந்துகளுக்கு பக்க விளைவுகள் அதிகம் உண்டு’ என்ற பயம் தான்.
எது ஒன்று விளைவை ஏற்படுத்துமோ,அது நிச்சயம் பக்க விளைவையும் ஏற்படுத்தும்.நவீன மருத்துவம் வெறுமனே வேதிபொருட்கள் சார்ந்ததில்லை.இயற்கையிலிருந்து நல்ல விஷயங்கள் அனைத்தையும் சுவீகரித்துக்கொண்டு தினம் தினம் உருமாறுவது அது!மான்கறி வைத்தியம்,காசினிக்கீரை வைத்தியம்,வேர்,தழை,இலை என எல்லாவற்றிலும் இருக்கும் மருந்தெனப்படுவதை நவீன மருத்துவம் எடுத்துக்கொள்ளும்.மஞ்சளிலுருந்து cocurmin, மிளகில் இருந்து piperazine போன்ற எல்லாமே ஆங்கில மருத்துவத்துக்கு நல்வரவுகளே.
இந்தப் புத்தகம்,சில நோய்களுக்கான மருந்துகளையும்,அவற்றுக்கான பக்க விளைவுகளோடு நவீன விஞ்ஞான மருத்துவம் எவ்வாறு கையாளுகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.ஆங்கில மருத்துவமே ஆகாது என விலக்கி வைக்கிறவர்களுக்கும்,தானாகச் சரியாகக்கூடிய காய்ச்சல்,தலைவலிக்குக் கூட சட்டென மருந்து,மாத்திரைகளை தேடிப் பழகியவர்களுக்கும் இது நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.