இருபதாம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதை நாவல் இலக்கியக் களத்தில் ஆளுமைச் சக்திகளாகப் பல எழுத்தாளர்கள் உருவெடுத்தனர். அவர்களில் குறீப்பிடத்தக்க ஒருவர் பிரபஞ்சன். பிரபஞ்சன் இன்றுவரை தமிழ் இலக்கியத்தில் பல வகைகளில் தனது பங்களிப்பை ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.
அழகிய தமிழ், அங்கதச் சுவை, இயல்பான நடை, அளவான பாத்திரப்படைப்பு, மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்க சுவாரஸ்யம் குறைவுபடாத தரம், மனித மாண்புகளை உன்னதப்படுத்தும் இலட்சியம் ஆகிய இவரது எழுத்தின் சிறப்பியல்புகளாக உள்ளன. அவரது படைப்புகளில் இருந்து சில பகுதிகள் இந்நூலில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.