போர்த் தொழில்
நோபல் பரிசுப் பெற்ற கிறித்துவப் பாதிரியார் டெஸ்மாண்ட் டுடூ இவ்வாறே எழுதினார்.
“மிஷனரிகள் ஆப்பிரிக்கா வந்தபோது அவர்களிடம்
பைபிள் இருந்தது. எங்களிடம் நிலம் இருந்தது.
வழிபாட்டிற்காக நாங்கள் கண்மூடி திறந்தபோது
எங்களிடம் பைபிள் இருந்தது; அவர்களிடம் நாடு இருந்தது.”
இதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் வெறுமை இருந்தது.
எங்களிடம் உரிமை இருந்தது. இப்போது
அவர்களிடம் உரிமை இருக்கிறது
எங்களிடம் வெறுமை இருக்கிறது.
எல்லா உரிமைகளையும் இழந்தப் பிறகு
ஒடுக்கப்பட்ட ஓர் இனம் விடுதலை நோக்கியே எழும்.
அவ்வாறே தமிழினம் இன்று அந்தப் புள்ளியில் நிற்கிறது.
அந்தக் குரலை இந்நூல் எழுப்பும், எப்போதும் என் எழுத்து
விடுதலை நோக்கியே எழும்.