மனித வாழ்க்கையானது முடிவின் தொடக்கத்தில் அடிவைத்திருப்பதை கிருஷ்ணா படம் பிடித்திருக்கிறார்.கடந்த இரண்டு நூறு ஆண்டுகளில்தான் விஞ்ஞானம் துரித வளர்ச்சி கண்டுள்ளது.இந்த இரண்டு நூற்றாண்டுகளில் இரண்டு உலகப் போர்களை மனித குலம் சந்தித்திருக்கிறது.எவருக்கும் தீங்கு நினையாத கோடான கோடி மக்கள் கொன்று கொன்று குவிக்கப்பட்டார்கள்.அவர்கள் உற்பத்தி செய்த பண்டங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.அப்படியானால்,அறிவியலுக்கும் அழிவுக்கும் சம்பந்தம் உள்ளதா?