பெத்திபொட்ல சுப்பராமய்யா: இவர் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்துப்பணிக்குத் தன் வாழ்வை அரப்பணித்தவர்.வாழ்க்கையில் மிகவும் எளிய மனிதர்.எழுத்தில் அவருடைய தனித்தன்மை ஒளி வீசுகிறது.பல புதினங்களையும்,நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துத் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார்.சமுதாயத்தில் தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கைவிடப்பட்ட ஆதரவற்றவர்களின் அவல வாழ்க்கை அனாதைக் குழந்தைகள் அன்புடன் வாழ்வினைக் கொண்டாடுதல்,உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அலைக்கழிக்கப்படுபவர்களின் வேதனைகள்,மனிதர்களின் பருவவயதுச் சிக்கல்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியாக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.கூரிய பார்வையுடன் உணர்வுக் கொந்தளிப்புகளை விவரிக்கிறார்.அனைத்துக் கதைகளும் மனிதநேயத்தையே முக்கியமாக முன்னிறுத்துகின்றன.