இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெண்கள் தங்கள் வாழ்க்கைக் கதைகளை வெளியே சொல்லக்கூடது.குடும்ப மானம் காப்பாற்றப் படவேண்டும் என்றொரு சூழல் நிலவிய காலக்கட்டத்தில் அவர்கள் தடைகளையும்,மரபுகளையும் மீறி தன்வரலாறுகளை எழுதியுள்ளனர்.இவை பெண்களின் குரலாக,ஏழுத்தாக,அனுபவப் பதிவுகளாக உள்ளன.இந்தியப் பண்பாட்டில் பெண்களின் ஆளுமை,சுயம் தனித்துக் காட்டப்படுவதன்று.குடும்பம்,திருமணம்,கல்வி,பொருளாதாரம்,சாதி,சமயம்,நாடு இவற்றினூடாகப் பின்னப்பட்டு ஊடாடி விவரிக்கப்படும் வாழ்க்கை விவரணைகளாக விரிவடைகின்றது.
இந்நூல் உலக அளவில் பெண் தன்வரலாறுகளின் வளர்ச்சியை சுட்டி செல்கையில் தமிழக மகளிரின் பதின்மூன்று பெண் தன்வரலாறுகளை ஒரு சேர ஆய்வுக்குட்படுத்துகிறது.பெண்களின் கடந்த கால வாழ்க்கைக் கதைகளுக்கும் நிகழ்கால சாதனைகளுக்கும்,எதிர்காலக் கனவுகளுக்கும் உள்ள சங்கிலித் தொடர்ச்சியை இந்நூல் முன்வைக்கிறது.