எழுத்தாளர் பவா செல்லதுரையைப் பற்றிய ஆவணப்படம்.
உலகிலேயே சிறந்த பிரியாணி!
வாசெல்லதுரை என்கிற பெயரை அவருடைய சில சிறுகதைகள் வழியாக மட்டுமே அறிந்திருந்தேன். வம்சி பதிப்பகம் மூலமாக சில நல்ல நூல்களை வெளியிட்டுவருகிறார் என்றும் தெரியும். அதற்குமேல் அவரோடு அதிக பரிச்சயமில்லை.
னால் அவரைப்பற்றிய சில செய்திகளை கதைகளை அடிக்கடி நண்பர்கள் வழியாக கேட்டிருக்கிறேன். அவை எல்லாமே மிகுந்த அமானுஷ்ய தன்மை நிறைந்தவை. சில நம்ப முடியாதவை. என்னது இப்படிக்கூடவா மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைக்க வைப்பவை. திருவண்ணாமலையில் இருக்கிற அவருடைய வீடு குறித்தும் அப்படிப்பட்ட நிறைய விஷயங்களை அறிந்திருக்கிறேன். எல்லாமே பாசிட்டிவானவைதான்.
ந்துவாக இருந்தால் காசிக்கும், இஸ்லாமியராக இருந்தால் ஹஜ்ஜூக்கும் போவதுபோல நவீன தமிழ் இலக்கியவாதியாக இருந்தால் ஒருமுறையாவது திருவண்ணாமலையில் இருக்கிற 19,டிஎம் சாரோனில் இருக்கிற பவாவின் வீட்டுக்கு போய்வந்துவிட வேண்டும் என்று கூட நினைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு பவாவின் வீட்டைப்பற்றியும் பவா-ஷைலஜா தம்பதியினரின் விருந்தோம்பல் குறித்தும் பேசாத இலக்கியவாதிகள் இல்லை. இந்த எளிய மனிதருக்கு எப்படி இத்தனை நண்பர்கள் என்று வியந்து போயிருக்கிறேன். எல்லா வட்டத்திலும் மட்டத்திலும் அவருக்கு உயிருக்கு உயிரான நண்பர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதை சமீபத்தில் நேரிலேயே பார்க்கவும் வாய்த்தது.
ேற்று (10.11.13) பவா செல்லதுரை பற்றிய ஆவணப்படம் ஒன்று சென்னையில் வெளியிடப்பட்டது.. பவா என்னும் கதைசொல்லி என்கிற இந்த ஆவணப்படத்தை மூத்த வலைப்பதிவரான செந்தழல் ரவியும், எஸ்கேபி கருணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆர்ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார். அத்திரைப்படம் பவா செல்லதுரை என்கிற எழுத்தாளரின் நேரடியாக கதை சொல்லும் திறனை பற்றியும் அவருடைய மறுபக்கத்தை வாழ்க்கையைப்பற்றியும் பேசுகிறது. அதோடு தன்னுடைய சிறுகதைகளுக்கான விதை எங்கிருந்து உருவானது என்பதையும் அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்துச்சென்று விளக்குகிறார் பவா. மிகவும் சுவாரஸ்யமான அந்த ஆவணப்படமும் விழாவில் திரையிடப்பட்டது. கதைசொல்லுதல் என்கிற கலையின் அழகை, அது தரும் மகிழ்ச்சியை அதற்கான அவசியத்தை இப்படம் உணர்த்துவதாக இருந்தது.
வ்வெளியீட்டு விழாவிற்கு பிரசாத் ஸ்டூடியோவில் கூடியிருந்த கூட்டமே பவா என்கிற மனிதரின் கருணையையும் அன்பையும் நட்பையும் உணர்த்துவதாக இருந்தது. ஆவணப்படத்தில் அவர் ‘’வேட்டை’’ மற்றும் ‘’முதல்மதிப்பெண் பெற்ற தோழியின் கதையும் இன்னமும் காதில் ஒலிக்கிறது. இக்கதைகளை படிப்பதை காட்டிலும் பவாவின் சாதாரண எளிய மொழியில் அவருடைய அதிக ஆர்பாட்டமில்லாத குரலில் கேட்பது அலாதியானதாக இருந்தது. விழாவின் இறுதியில் பேசிய செந்தழல் ரவி பவாவின் குரலிலேயே அவருடைய கதைகள் பதிவு செய்து அதை ஆன்ட்ராய் அப்ளிகேஷனாக வெளியிடப்போவதாக குறிப்பிட்டார். சீக்கிரம் பண்ணுங்க பாஸ் வீ ஆர் வெயிட்டிங்! - அதிஷா ( பத்திரிக்கையாளர்- புதிய தலைமுறை)