பற்றி எரியும் பாக்தாத்
ரிவர்பெண்டின் வழியாக விரியும் ஈராக், அந்த நாட்டைப் பற்றி நிலவும் பல பொதுப்படையான பிம்பங்களை எளிதாகக் கலைத்துப் போடுகிறது. போரின் உக்கிரங்களில் சிக்கி, சிதிலமடைந்துபோகும் ஒரு முன்னோக்கிய சமூகத்தின் வரலாறு நமக்கு மிகவும் அருகிலேயே இலங்கையில் நிகழ்ந்திருப்பதுதான். ஆனால் போரால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு புதிய உலகத்திற்குள் ரிவர்பெண்ட் தனது அனுபவங்கள் வழியாக நம்மை அழைத்துச் செல்லும்போது ஏற்படும் அதிர்ச்சிகள் புதிது. போருக்கு முந்தைய ஈராக்கையும் போரில் சிக்கி இன்னும் நாசாமாகிக்கொண்டிருக்கும் ஈராக்கையும் அருகருகில் இருக்கும் கண்ணாடிகளிலிருப்பதுபோல தனது எழுத்துகளில் வாசகர்களுக்காகப் பதிவு செய்கிறார் ரிவர்பெண்ட். அவரது வலைப்பதிவுகள் வரையும் ஈராக்பற்றிய சித்திரங்கள் நமக்குப் புதிய தரிசனங்களைத் தருபவை. மென்மையான சொற்களின் வழி நமது உணர்வுகளைப் பற்றி எரியச் செய்யும் நூல் இது.