காதலையும் காமத்தையும் அவ்வளவு ப்ரியத்துடன் எழுத்தில் கொண்டாடிய பின்பே ஆணாதிக்க சாடல்,காதலின் அபத்தம்,காமத்தில் ஆன் செயம் போதாமை,காதலால் நிகழும் சமூக வன்மம் இப்படி எல்லாவற்றையும் எழுதித் தீர்க்கிறார் சாய் இந்து.ஒரு காந்தத்தில் வடபுலம் தென்புலம் போல் நேர் எதிர் தன்மை இருப்பதுபோல் இவரின் எழுத்திலும் இருக்கிறது.அதுதான் எதார்த்தமாகவும் இருக்கிறது.இதன் மூலம் தேவையற்றதை உடைத்து தேவையானதை உருவாக்க முயல்கிறார்.உடைப்பதும் கட்டமைப்பதுமான செயலை காதலை முன் வைத்தே இத்தொகுப்பு செய்கிறது எனலாம்.