இக்கதைகள் மிகவும் பழங்காலத்து நீதிக் கதைகள் என்றாலும், இப்பொழுது படித்தாலும் அவை மிகவும் சுவையாகவும் , பயன்மிக்கதாகவும் உள்ளன
நமது மூதாதையர் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு ரசித்து மகிழ்ந்த கதைகள் அல்லவா!
இதன் மூலநூல் சமஸ்லிருதத்தில் உள்ளது. இக்கதைகளின் மேன்மையைக் கொண்டு, இந்நூல் அநேகமாக உலக மொழிகள் அனைத்திலுமே
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், நான் இதை அதன் மொழிபெயர்ப்பாகத் தயாரிக்கவில்லை. அதிலுள்ள கதைகளையும், நீதிகளையும் அப்படியே எளிய தமிழில்
வடித்துள்ளேன். அதாவது அந்நூலுக்கு அழகான தமிழ் வடிவம் கொடுத்துள்ளேன்.
நம் தமிழில்கூட, எத்தனையோ ‘ பஞ்ச தந்திரக் கதைகள்’ முன்பே வெளியாகியிருக்கலாம். ஆனால் , இதுபோன்று - விரிவாக- அதில் கூறப்பட்டுள்ள
நீதிகள் ஒன்றயும் விடாமல் - வெளிவந்ததே இல்லை.
அந்த வகையில் நீங்கள் இதையே முதல் நூலாகக் கொள்ளலாம்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் - குருவியும் காக்கையும்கூட சமயதிற்கேற்ற நீதிகளைப் பேசுகின்றன. கதைப்படி அவை யாருக்கோ என்று இருந்தாலும்
அனைத்தும் நம்க்கும்தான் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஓர் அரசை - ஓர் நாட்டை அரசன் ஒருவன் வெற்றிகரமாக எப்படி அரசு புரிய வேண்டும் என்பதற்கான நீதிகள் அநேகம் இதில் மலிந்துள்ளன.