இந்த மலையாளம் சிறுகதை தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன், சந்தோஷ் ஏச்சிக்கான, சித்தாரா... என்பதாகக் கால வரிசைப்படுத்திப் பார்க்கிறேன்.
கேரளத்திற்கு வெளியே இருப்பவர்கள் இப்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பது என்பது முடியுமா? என்பது சந்தேகம்தான். மலையாளச் சிறுகதைகளின் கருத்தோட்டமும் நடைப்போக்கும் பதின்ம ஆண்டுகளில் எப்படி எல்லாம் மாறியிருக்கின்றன என்பதை இத்தொகுப்பு புலப்படுத்துகிறது.