ஓதி எறியப்படாத முட்டைகள்
இஸ்லாமிய சமூகத்தின் இருவேறு உலகங்களின் இயல்புகளைச் சொல்லுகிறது மீரான் மைதீனின் நாவல். பொருளாசையும் தரித்திரமும் கொண்ட இருவேறு மனித இயற்கைகளின் மோதலில் முன் நகர்கிறது இதன் கதையோட்டம். காணும் செல்வத்தையெல்லாம் தன்னுடைய தாக்கிக்கொள்ளும் ஹமீதுசாகிபு. வறியவனான குச்சித் தம்பி இருவருக்கும் இடையில் நடக்கும் சதுரங்க விளையாட்டின் பின்புலத்தில் பல்வேறு மனிதர்கள் உருட்டப்படுவதை எதார்த்தமும் மீபுனைவுமாக விரித்துச் சொல்லுகிறார் மீரான் மைதீன்.