சிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், மரபுகள், தொமங்கள், மொழிகள் என அனைத்திற்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தைச் சொல்லிச் செல்கிறது. இடம் மறுக்கப்பட்ட இடத்தில் தனக்கான இடத்தை உருவாக்குவதுதான் பெண்ணியச் செயல்பாடு எனில் அது எதிர்காலத்தை மட்டுமின்றி, இதுவரையான காலங்களையும் தன்வயப்படுத்த வேண்டும்.