வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச்சித்திரம்போல ஒன்றிரண்டு வரிகளில் தீட்டிவிட்டு காலமெல்லாம் ஒளிமறைவுப் பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள்மீது வெளிச்சம் விழும்படியாக ஒரு நாவலை எழுதிப் பார்த்திருக்கிறார் விட்டல் ராவ். தெருக்கள் வீடுகள் கடைகள் திரையரங்குகள் உணவுவிடுதிகள் குதிரைப்பந்தயம் என சென்னை வாழ்க்கையைப்பற்றி அவர் அளிக்கும் பல நுண்தகவல்க்ள வாசிப்பின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன. அறுபதுகளின் வாழ்க்கை நம் கண்முன்னால் எழுத்தில் ரத்தமும் சதையுமாக விரிகிறது.
-பாவண்ணன்