தமிழ் பிரதேசங்களில் அதி உச்ச இராணுவ இருப்பும் நில அபகரிப்புகளும் ஏன் இடம் பெறுகின்றன என்பது பற்றிய ஆழமான தேடல் தேவை என்ற நோக்கில் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் இவ் வெளியீட்டை வெளிக் கொணர்கின்றது.இராணுவ இருப்பும் நில அபகரிப்பும் தொடர்வதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய தாக்கத்தை நில அபகரிப்பு ஏற்படுத்துகின்றது என்பதனை இந்த தொகுப்பில் உரையாடல் ஊடகவியல் முறையியலை பயன்படுத்தி ஊடகவியலாளர் ஜெரா முன்வைக்கிறார்.