நீதி மறுக்கப்பட்ட கதை
டாக்டர் பினாயக் சென்னின் போராட்டம்
உலகப் புகழ்பெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வேலூரிலுள்ள கிரிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற டாக்டர் பினாயக் சென் தனது வாழ்க்கையை, தனது மருத்துவ அறிவை சத்தீஸ்கர் பழக்குடி மக்களுக்காக அர்பனித்தவர். “பணக்காரனாக இருப்பதல்ல, புகழ்பெற்றவனாக இருப்பதல்ல, அதிகாரம் கொண்டவனாக இருப்பதல்ல, ஏன் மகிழ்சியானவனாக இருப்பதுகூட அல்ல, பண்பட்ட மனிதனாக இருப்பதே அவனது வாழ்க்கையின் லட்சியம்” என்ற அமெரிக்க எழுத்தாளர் பிலிப் ராத்தின் வார்த்தைகளுக்கு வாழும் உதாரனமாக இருக்கும் மனிதர் பினாயக். அவருக்கு சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் இழைத்த கொடுமையையும் அநீதியையும் அதற்கெதிராக உலகெங்கும் எழுந்த மக்கள் போராட்டங்களையும் விவரிக்கிறது இந்நூல்.
தமிழில் : க.திருநாவுக்கரசு, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்