’அந்நிய ஆண் வந்துவிட்டார்’ என்றாலே ஓடிச் சென்று கதவுக்குப் பின்னே ஒளிந்துகொள்ளும் இந்தியப் பெண்கள் மட்டுமல்ல ....சர்வதேச அரங்கிலும் பெரும் போராட்டத்துக்குப் பிறகே வழக்கறிஞராகப் பெண்கள் தங்களை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். ’குங்குமம் தோழி’ இதழில் வெளியான சட்டத் துறையில் சாதித்த பெண்மணிகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பே இப்போது உங்கள் கையில் அழகிய நூலாகத் தவழ்கிறது.