இந்தச் சிறுகதைகள் மெளனத்தின் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு கதையில் ஆண்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவ் கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் இலக்கியத்தில் செகாவை ஒரு கதாபாத்திரமாக வைத்து எழுத்தப்பட்ட முதற்கதை இதுவே.
குறுங்கதை , நீல்கதை, தனிமொழி, உரையாடல் மட்டுமே கொண்ட கதை, மிகைபுனைவு, மறுகதை, விந்தை என எத்தைனயோ மாறுபட்ட கதை கூறும் முறைகளில் புனைவின் முடிவில்லாத சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார்.
நவீன சிறுகதைகளின் பரப்பை முற்றிலும் புதியதொரு புனைவுத்தளத்திற்க்குக் கொண்டு சென்றிருப்பதே இத்தொகுப்பின் சிறப்பு.