பயணங்கள் மனிதனின் அகத்தை விரியச்செய்யும் என்பார்கள்.தெளிவாக திட்டமிட்டு ,சௌகர்யமான இடத்தில் தங்கி எழுதப்பட்ட உல்லாச அனுபவங்கள் அல்ல இவை.கறுப்பு நரம்பென நிலமெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் நீண்டு நம் தேசத்தை நெய்யும் நெடுஞ்சாலையின் கதை. கா.பாலமுருகன்,இந்த நூலில் விரித்துக்காட்டுவது நாம் காண மறுக்கும் ஒரு கருப்பு வாழ்வு.லாரி டிரைவர்கள்,டீசல் திருடர்கள்,வழிப்பறிக்காரர்கள்,விலைமாதர்கள் என விளிம்புநிலை மனிதர்கள் இந்த நூல் எங்கும் ஊடாடுகிறார்கள்.எளிய மனிதர்களின் பாடுகள்,அவர்களின் குதூகலங்கள், கொண்டாட்டங்கள் எந்த மிகையுமின்றி இயல்பாகப் பதிவாகியுள்ளது இந்தப் பயணத்தில்.வாசிப்பவர்களை தன் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் சுவாரஸ்யமான மொழி,ஒவ்வோர் அத்தியாயத்திலும் நம்மை அச்சர்யப்படுத்தும்,நெகிழ்த்தும்,எரிச்சலடைய வைக்கும்,கோபப்படுத்தும்;முகத்தில் அறையும் அப்பட்டமான இந்த வாழ்வின் அபத்தங்கள்,அற்புத கணங்கள் என இந்த நூல் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.