உணர்வுகள்,அவற்றின் சிக்கல்கள் எனக் கொண்டு போவதை ஒரு சட்டத்தில் அடைத்தல் வெகு சத்தியம்.அதனை மீறுவதற்கு எழுத்தில் வல்லமை வேண்டும்.ஜெயந்திசங்கர் இயல்பாக இந்தச் சட்டங்களை மீறுகிறார்.மீறுவது தெரியாமல் வாசிக்கிறோம்.வெகு திறமையான பாடகர்,கற்பனா சுரங்களில் பாடலை மேலும் எடுப்பது போல ஒரு கதையின் தாக்கமும் கதைத்தொகுப்பின் தாக்கமும் வேறு வேறு தளங்களில் அசைபோட வைக்கின்றன.