கதையல்லாத உலகத்திலிருந்து கதைகளின் புல்வெளிகளை நோக்கி வந்திருப்பதே சுரேஷ்குமார இந்திரஜித்தின் இந்தத் தொகுப்பு. மனித மனதின் விசித்திரங்களினூடே தன் புனைவுவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கும் அவர் இந்த விசித்திரங்கள் தமிழ்ச் சமூகத்தின் சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் எவ்வாறு இயங்குகிறது என்பதை பல கதைகளில் தொட்டுச் சொல்கிறார்.