நடை இதழ்த் தொகுப்பு
தொகுப்பு : கி.அ. சச்சிதானந்தம்
இலக்கியத்திற்கு மட்டுமே ‘எழுத்து’ என்ற உரத்த குரலுடன் சி.சு. செல்லப்பா இயங்கி வந்த காலத்தில், ஓவியம், கலை, நாடகம் என்ற பன்முகத் தன்மையுடன் சிற்றிதழின் இயங்கு தளத்தை விரிவுபடுத்தியது, சி.மணி உருவாக்கிய ‘நடை’, எட்டு இதழ்களே வெளிவந்த ‘நடை’ தமிழின் முதல் கலை இலக்கிய இதழாய் அறியப்படுகிறது.