நடிகர் திலகம் மறைந்த பின்னும்கூட,ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளன்று அன்னை இல்லத்துக்குச் சென்று அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்துவது என் வழக்கம்.அப்படி ஒரு பிறந்த நாளன்று அன்னை இல்லம் சென்றிருந்தேன்.அதற்கு முந்தைய நாள்தான்,அதாவது செப்டம்பர் 30 அன்று சிவாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியை வழக்கம் போல் நடத்தியிருந்தோம்.மறுநாள் காலை கமலா அம்மாவை பார்த்தோம்.அப்போது கமலாம்மா என்னிடம், “நேற்று நீ என்ன செய்தாய்?இவர்கள் இல்லோரும் உன் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டுக் கண்ணீருடன் உணர்ச்சிமயமாக வந்தார்கள்” என்றார்.