ந.முத்துசாமி நாடகங்கள்
மிழ் நாட்டின் நவீன நாடகச் செயல்பாடுகள் கூத்துப்பட்டறையில் மையம் கொண்டிருக்க வில்லை அல்லது கூத்துப்பட்டறையில் தொடங்கி, கூத்துப்பட்டறையோடு முடிந்துவிடவும் இல்லை, அவை பன்முகத்தன்மை கொண்டு பல மையங்களில் விரிந்து படர்ந்திருக்கிறது. எனினும் கூத்துப்பட்டறையும், ந.முத்துசாமியும் இல்லாமல் தமிழ்நாட்டின் நவீன நாடக வரலாற்றினை தொடங்கவும் இயலாது, முடிக்கவும் இயலாது.