அஸ்வகோஷ் நாடகங்கள் கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை. எவ்வித மினுக்கும் தளுக்கும் இல்லாத ரொம்பச் சாதாரணமான மொழியில் நேரடியாகக் கதை சொல்லும் பாணி அவருடையது.வட ஆற்காடு வட்டார மொழி இயல்பாக அவரது கதைகளில் ஊடாடும்.வறுமையை நேரடியாகச் சொல்லாமல் அது ஏற்படுத்தும் உறவுச்சிக்கல்கள்,மன அவஸ்தைகளைக் கதையாக்கியதுதான் அஸ்வகோஷ் நாடகங்களின் தனிச்சிறப்பு.