சா.பாலுசாமி சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், கவிஞர்; கலையியல் ஆய்வாளர்.
மாரிக்கால இரவுகள், அர்ஜீனன் தபசு, மாமல்லபுரம் - புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும், நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் முதலிய நூல்களின் ஆசிரியர். பாரதிபுத்திரன் என்பது இவரது புனைபெயர்.
விசித்திர சித்தன், சங்கீர்ண ஜாதி, சித்திரகாரப்புலி எனப் பட்டங்கள் பல மாணிக்கங்களாகப் பதிக்கப்பெற்ற மகேந்திரவர்மனின் மகுடத்தில் மத்தவிலாசன் என மேலுமொரு மாணிக்கம் ஒளிரக் காரணமாகிய படைப்பு இது!
தமிழகத்தில் இயற்றப்பெற்றது; அங்கத நாடக வகைக்கு ஆகச் சிறந்த படைப்பு; பல்லவர் காலத்தின் சுவடாக நிலைத்த இன்னுமோர் ஒப்பற்ற கலையாக்கம்; நூற்றாண்டுகள் பல கடந்து இன்றும் போற்றப் பெறுவது... எனப் பல சிறப்புகள் இதற்கு உண்டு.
மூல ஆசிரியனின் உள்ளம் உணர்ந்த, கலையாக்க நுண்மை தேர்ந்த, இருபெரும் மொழிகளிலும் புலமை கொண்ட ந.பலராம ஐயர், தி.கி.நாராயணசாமி நாயடு,ஔவை துரைசாமிப் பிள்ளை ஆகிய பேராளுமைகள் செய்த மூன்று மொழிபெயர்ப்புகளை அரிய ஆய்வுத் தரவுகளுடன் பேராசிரியர் சா.பாலுசாமி அவர்கள் பதிப்பித்துள்ள இந்நூல் ஒரு கொடை மட்டுமல்ல... வரலாற்றையும் கலையையும் இணைக்கும் ஓர் அரிய ஆவணமும் ஆகும்.
முனைவர் பா.இரவிக்குமார்,
பேரா.இரா.பச்சியப்பன்.
No product review yet. Be the first to review this product.