கலாராணியின் கதைகளில் ஓங்கி நிற்கும் முதன்மையான உணர்வு பெண் வலி.ஆண்களால் உணர இயலாத பெண்களின் வலிகளை,தவிப்புகலாஈ,ஏக்கங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியார்.வேண்டுதல்,மௌனப் போராளி,மதில் மேல் பூனை எனப் பல கதைகளை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும்.
சூர்மையாக,நுட்பமாக,எளிமையாக எழுதுகிறார்.சுற்றுச்சூழல் ஆர்வம்,மண்ணுக்கும் மனிதருக்கும் உள்ள உறவு இவை அவரது படைப்புகளில் அவரை அறியாமல் விழுந்திருக்கும் அழகுகள்.மண்ணையும் மரபையும்,பண்பையும் விட்டு விலகிப் போகாத படைப்புகள் .