1970களில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம் என்ற புது முயற்சியை பத்திரிகைத் துறையில் கொண்டு வந்தவர் அனந்த் அவர்கள். இன்னும் சொல்லப் போனால் ‘விசிட்டர்’ அனந்த் என்றால் பத்திரிகை உலக முன்னோடிகள் அனைவருக்கும் தெரியும். இப்போதும் பத்திரிகைத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பலபேருக்கு ஆசிரியராக இருந்து வழிகாட்டியவர்.
இப்போது நக்கீரன் சந்தித்த நெருக்கடிகளைப் போன்றே மிஸா காலத்தில் பத்திரிகைகள் சந்தித்த நெருக்கடிகள், இந்திராகாந்தியின் இளையமகன் சஞ்சய்காந்தியின் அட்டகாசங்கள், மிஸா சித்ரவதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் அனுபவித்தவர்களின் ரண வேதனை, ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் ஆரம்பித்ததன் பின்னணி என தனித்தனியாக நான்கு தலைப்புகளில் 1977-78ஆம் ஆண்டுகளில் புத்தகங்கள் எழுதியிருந்தார். அவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம்.