காவிரி நேற்று - இன்று - நாளை - பெ.மணியரசன்; பக்.208; ரூ.120; பன்மை வெளி, சென்னை-78; 044 - 2474 2911.
காவிரி நதி நீர்ப்பிரச்னை இன்று நேற்றல்ல, பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்பதை விளக்கமாக எடுத்துரைக்கும் நூல்.
1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம், 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட "மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம்' , 1990 இல் அமைக்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயம், 2007 இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு, அதை தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் எதிர்கொண்ட விதம் என காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பான அனைத்து விஷயங்களும் இந்நூலில் பதிவு பெற்றுள்ளன.
காவிரி கர்நாடகத்துக்கு மட்டும் சொந்தமானதா? கர்நாடகத்துக்குப் போக அதன் உபரிநீரைத்தான் தமிழ்நாட்டுக்கு அது தர வேண்டுமா? ஒவ்வோராண்டும் கர்நாடகம் தரும் காவிரி நீரின் அளவு குறைந்து கொண்டே போவதற்கான காரணங்கள் எவை? தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்படும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் ஏமாவதி, ஏரங்கி ஆறுகளில் புதிய அணைகளைக் கட்டி அணைக்கு வரும் நீரின் அளவைக் குறைத்தது, கபினி அணைக்குத் தண்ணீர் வழங்கும் நூகு மற்றும் சாகரதொட்டகரே நீர்த் தேக்கங்களிலிருந்து வேறு ஆற்றுப் படுகைகளுக்கு நீரேற்று இரைப்பான்கள் மூலம் தண்ணீரைத் திருப்பிவிடுவது உள்ளிட்ட கர்நாடகத்தின் செயல்கள் என பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
காவிரிப் பிரச்னைக்கான அடிப்படைக் காரணம் இனப் பிரச்னை என்பதாகப் பார்க்கும் நூலாசிரியரின் பார்வையில் மாறுபட்டுள்ளவர்களுக்கும் கூட நூல் தரும் அரிய தகவல்கள் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
No product review yet. Be the first to review this product.