கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு நக்கீரன் இதழின் மாவலி பதில்களில் வெளியான அகம்- புறம் ஒவ்வொன்றும் ஒருவிதம் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை அரசியல் வாழ்க்கை, ஜெயல்லித்தாவுடனான அவரது உறவு. கட்சி தொண்டர்களை அவர் அணுகிய விதம், ஆட்சியில் இருந்தபோது அவர் அடித்த பல்டிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களிடம் அவரின் அனுசரணையான போக்கு, சரணாகதிப் ப்டலங்கள் என எம்.ஜி.ஆர் பற்றிய எல்லா ரசபாவனைகளையும் அருமையாக பதிவு செய்திருந்தார் தம்பி லெனின். குறிப்பாக வெளிப்பார்வையில் எம்.ஜி.ஆருக்கு இருந்த வள்ளல் இமேஜையும் தாண்டி இருந்த புற இமேஜை மிகநுட்பமாக சொல்லியிருந்தார்.