மெல்லத் தமிழன் இனி...
சேலத்தில் பிறந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இருக்கிறார். ‘தினமலர்’, ‘காலைக்கதிர்’ ‘விகடன்’ குழுமம் ஆகியவற்றில் பணியாற்றியவர். 135 ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமம் அதன் தமிழ் நாளிதழைத் தொடங்கும்போது அதன் சிறப்புச் செய்தியாளராக தேர்வு செய்யப்பட்டார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் அரசியல், சுற்றுச்சூழல், அறிவியல் கட்டுரைகள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை சுவாரஸ்யமான நடையில் எழுதி வருகிறார்.