நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் அமைப்புகளின் அதிகாரத்திற்குகீழ்தான் இச்சமூகம் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.அதன் பிடியிலிருந்து துண்டித்துகொண்டும்,எதிர்த்தும் செயல்படுபவனே கலைஞனாக இருக்க முடியும்.பிழைப்பிற்கென குடிபெயர்ந்துவிட்ட நகரத்தில் கட்டமைக்கப்பட்ட,இறுகிய இந்தச் சமூகத்தோடு ஒரு கவிஞனது இருப்பும்,அவன் எதிர்கொள்ளும் மனிதர்களின் முரண்களும் எவ்வளவு நெருக்கடிமிக்கது.இதன் வழியாகத்தான் எவ்வித மறைப்பும்,பாசாங்குமின்றி வெளிப்பட்டிருக்கும் இக்கவிதைகளை வாசிக்கையில் சந்திக்கக்கூடிய வன்மங்கள்,பாலியல் சிக்கல்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட தத்துவங்களின் தொல்விகளென பயணியின் கண்டடைதல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.