வாழ்வும் சாவும் வலியால் பின்னப்பட்ட இத்தொகுப்பின் கதைகளில் இருப்பது வன்முறை ஏய்ப்பு,நயவஞ்சகம்,அவலம்,ஏமாற்றம்,ஆற்றாமை இவை நிறைந்த வாழ்வு மற்றும் சாவு.இவற்றின் ஊடே பாசமும் வாஞ்சையும் அன்பும் காதலும் நட்பும் அவற்றிலிருந்து பிறக்கும் ருசியான உணவும்,மொழியும் மௌனமும் இதமும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தாலும் கடைசியில் ஊமைக்காயமான ஒரு வலி மனத்தை நிறைக்கிறது..அது நீர் காணாத பயிர்களின் வலிபோன்ற வலி.அதற்கு வெகு அருகாமையில் நின்றுகொண்டு கதைசொல்கிறார் கலைச்செல்வி.அதுதான் அவர் சாதனை என்று சொல்லலாம்.