முதலாளித்துவ சமுதாயத்தில் அரசு குறித்த பிரச்சனை மார்க்கிசிய வாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.அரசு என்பதை சமுதாயத்திற்கு மேலே நின்றூகொண்டிருக்கும் ஒரு பக்கச்சார்பற்ற நடுவராக,நடுநிலையான நீதிபதியாக நாம் பார்க்கவில்லை..ஒவ்வொரு அரசின் அடிப்படையான சாரம் என்பது,அதன் ‘‘ஆயுதம் தாங்கிய மனிதர்களின் அமைப்பு’’,காவல்துறை,நீதிமன்றங்கள் மற்றும் பிற பொறியமைவுகள் மூலம் அது சமுதாயத்தில் உள்ள ஒரு வர்க்கத்தின் நலன்களுக்கு, முதலாளித்துவ சமுதாயத்தில்,முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது என்பதே ஆகும்.