ஒரு திரைப்படக் கலைஞராக,
மனித உரிமை ஆர்வலராக,
ஈழ விடுதலையின்பால் தீராத காதல் கொண்டவராக,
இயற்கை வேளாண்மையை செயலிலும் நடைமுறைப் படுத்தியவராக,
அணு உலைகளின் ஆபத்தை எதிர்க்கும் குரலாக
இப்படி எண்ணற்ற பரிமாணங்களைக் கொண்ட தோழர் மணிவண்ணன், எதிர்படும்போதெல்லாம், எல்லோருடைய கவிதைகளையும், எழுத்துக்களையும் சிலாகித்துச் சொன்னவர். தான் எழுதியதை வெளிகாட்டிக்கொள்ளவே இல்லை. அதுதான் அவரது பண்பு.
இங்கு கொடுக்கப் பட்டிருப்பது ஒரு பெருமழைக்கு முன்னதான சிறு தூறல் மட்டுமே.