ஒவ்வொரு இந்திய மொழியிலும் வெளீயாகியுள்ள நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதையும் அவற்றைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் தம்முடைய பொறுப்புகளீல் ஒன்றாகச் சாகித்திய அக்காதெமி ஏற்றுக் கொண்டுள்ளது.இந்நூலில் 20 மலையாளச் சிறுகதைகள் அடங்கி உள்ளன.
மலையாள இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது சிறுகதை இலக்கியம்.முக்கால நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த இலக்கியத்தில் போற்றத்தக்க பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன.வாழ்க்கை நிலைகளிலும் மனித உறவுகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை இவை கோடிட்டுக் காட்டும்.
இத்தொகுப்பில் காணும் இருபது கதைகளும் மலையாளச் சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நமக்குப் புலப்படுத்துகின்றன.