மலைச்சாமி ஐ.ஏ.எஸ். (ஓய்வு)
வாழ்க்கை வரலாறு
மனம் விட்டு ஒன்றை நான் சொல்கிறேன். நான் என் வாழ்க்கையில் இந்த வினாடிவரை நேர்மையாக இருப்பதற்கு என் மனைவியின் இயல்பு ஒரு காரணம். பேராசை இன்மையே அந்த இயல்பு.
பல உயர் அதிகாரிகள் நேர்மைப் பாதையிலிருந்து விலகிப் போவதற்கு அவர்களின் மனைவிமார்கள் தான் காரணம் என்பதை நான் நன்கறிவேன், அவர்களின் பேராசை, பிறரோடு ஒப்பிடுதல் போன்றவை எந்த அளவுக்கு அவர்களின் வாழ்கைத் துணைவர்களை வழி தவறிப் போக வைக்கிறது, நெறி பிறழ வைக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
நான் கொடுத்து வைத்தவன். நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் என்னைப்போலவே என் மனைவியும் தெளிவாக இருந்தாள்; இருக்கிறாள்.
-கே.மலைச்சாமி