பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தைக் கட்டி முடித்த ஒரு கதாநாயகனின் கதை இது.
முதல் முறையாக பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றபோது சிங்கப்பூரில் அடிப்படை கட்டுமானம்கூட இல்லை.பெரும்பாலான மக்கள் குடிசைகளில் தான் வசித்து வந்தார்கள்.வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது.நோய்கள்,திருட்டுகள்,குற்றங்கள் பெருகிக்கொண்டிருந்ததன.
இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ.அவநம்பிக்கை,தயக்கம்,அச்சம்,அனைத்தையும் நகர்த்தி வைத்துவிட்டு சிங்கப்பூரைக் கட்டியமைக்கத் தொடங்கினார் லீ.
தரமான கல்வி,நல்ல வாழ்க்கை தரம்,வலுவான பொருளாதாரம்,ஊழலற்ற அமைப்பு,ஒழுங்கு,தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார் லீ.
அவருடைய மன உறுதி,தொலைநோக்குப் பார்வை,திட்டமிடும் திறன்,ஆளுமைப் பணிகள்,ராஜதந்திரம் ஆகியவற்றை சிங்கப்பூர் மட்டுமல்ல ,உலகமே வியந்து இன்று பாராட்டுகிறது.
மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட ஒரு தலைவரிடம் முழுமையான அதிகாரம் கிடைத்தால் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றமுடியும் என்பதற்கு லீ குவான் யூ ஒரு தலைசிறந்த உதாரணம்.
லீ குவான் யூவின் அசாதரணமான வாழ்க்கையை நவீன சிங்கபூரின் வரலாற்றோடு சேர்த்து சுவைப்பட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. தினமணி.காமில் வெளிவந்த தொடரின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம் இது.
ஒரு வலுவான,வளமான தேசத்தை உருவாக்கவேண்டும் என்று கனவு காணும் அனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு நூல்.