தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.
எப்படிப் புயலின் முர்க்கத்திலும், சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பிலும் ஒரு வசீகரம் இருக்கிறதோ அதே வசீகரம் இந்தக் கதைகளிலும் இருக்கிறது.
- இரா.முருகவேள்