லா வோ த்ஸுவின் சீன ஞானக் கதைகள்
24 ஆரக்கால்களுடன் சக்கரம் செய்கிறோம்.
எனினும் அச்சாணிக்கும் சக்கரத்துக்கும் இடையே உள்ள
வெற்றிடத்தாலேயே அது இயங்குகிறது.
நான்கு புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்கிறோம்.
எனினும் இடையே உள்ள வெற்றிடத்தில் தான் நாம் வசிக்கிறோம்.
உலகில் தோன்னும் பொருட்கள் யாவும் உபயோகத்திற்குரியவை.
என்றாலும் அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும்
தோன்றாப் பொருளில் தான் உயிரோட்டமான வாழ்வு உள்ளது.
லா வோ த்ஸுவின் இது போன்ற தத்துவங்களைத்தான்
எளிமையான நடையில் விளக்குகிறது இந்த புத்தகம்.
ஆசிரியர் : குருஜி வாசுதேவ்