குட்டிச்சுவர் சிந்தனைகள்
குழந்தைகள் நம்மிடம் கேட்கும் கேள்விகள்...
”அப்பா, மீன் தண்ணி குடிக்குமாப்பா?”
“அம்மா, ஆடு மழையில நனைஞ்சா ஜலதோஷம் புடிக்குமா?”
இதற்கு நாம் சொல்லும் பதிகள்...
“தெரியல, இப்போ ரொம்ப முக்கியமா?”
“உனக்கு வேற வேலையே இல்லையா?”
நாம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள்...
“இங்கு சக்கரைய யாரு கொட்டினா?”
“யூனிபார்ம கண்ட இடத்துல கழட்டிப் போடாதன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்?”
இதற்கு குழந்தைகள் சொல்லும் பதில்கள்...
“தெரியல, இப்போ ரொம்ப முக்கியமா?”
“உனக்கு வேற வேலையே இல்லையா?”
குழந்தைகள் எல்லாவற்றையும் நம்மிடமே கற்றுக்கொள்கிறார்கள்!