திருக்குறளுக்கு எத்தனையோ வகையான உரைகள் உண்டு. கருத்துரை, விளக்க உரை, எழிலுரை, பகுத்தரிவுரை, ஒப்பாய்வுரை எனப் பல்வேறு வகையன உரைகள் உண்டு. முனைவர் என். நாகராஜனுடைய இந்நூல் “கதையுரை” என்று சிறப்பிக்கத்தக்க சீர்மை உடையது. குறள் வழி நின்றவர்கள் நூலில் வள்ளுவர் வாக்கு சான்றோர் வாழ்வும் ஊசியும் நூலும்போல் ஒன்றையொன்று தொடர்ந்து செல்லும் நேர்த்தி நெஞ்சை அள்ளுகின்றது.