நதியாக உருப்பெறும் காவிரியின் ஊற்றுக்கண்ணிலிருந்து தொடங்கி குடகு மலையை சுற்றி பயனித்த அனுபவத்தைத் தரும் இந்நூல்
பசுமையைக் கொண்டாடுகிறது. அம் மக்களின் நிலம், மொழி, வணிகம், சடங்குகள், விழாக்கள், இசை, நடனம், விவசாயம், அரசியல், இன்னபிற
அம்சங்களும் அழகிய காட்சிகளாகப் பதிவாகியுள்ளன. அந்நிலப் பெருமைகளும் மதிப்பாய்ந்த மனித மனமும் தனித்த அடையாளங்களாக முன்
வைக்கப்பட்டுள்ளன. ‘ அவசியம் பார்க்க வேண்டிய அழகான நாடு குடகு ‘ என ஆசிரியரின் குரலில் முத்தாய்ப்பாய் ஒலிக்கும் இந்நூல் அரிதான
குறிஞ்சி நில இலக்கிய ஆவணங்களில் முக்கியமானது.